Monday, November 11, 2013

SABARIMALA YATHRA

SWAMIYE SARANAM AYYAPPA
 சுவாமியே சரணம் ஐயப்பா

SABARIMALA YATHRA 2013
சபரிமலை யாத்திரை 2013

ஓம் ஸ்ரீ  சாஸ்தா சேவா ஆத்மஞான சாதனா சமிதி






OM SRI SASTHA SEVA ATHMAGNANA SATHANA SAMITHI, EGMORE, CHENNAI-8

தீக்க்ஷைக்கு வேண்டிய ஆயத்தம்
1. ஆகாரம் ..எடுக்காமல் வரவேண்டும் (பால். காபி.டீ. மட்டும்)  இரண்டு நிலைகளை உணத்துவது, சாப்பிட்டதும் போதும் என்ற நிறைவு இறைப்பசிக்கு உட்படுத்துதல் (இறை நினைவில் இருத்தல்)
2. ஆறுமலர்கள்  .. காமம், குரோதம், மோகம், மதம், லோபம், மார்ச்சர்யம், ஆறுநிலைகளை பயிற்சியில் கலைந்து மலர்களால் (ஆறு) அர்ச்சித்தல் ..உடல் ஒழுக்கம்,
3. ஐந்து பழங்கள் .. ஐந்து புலன்களை இந்திரிய அடக்கத்தால் கனிசுவையாக்கி இறை நினைவில் இருத்தல்...இந்திரிய ஒழுக்கம்.
4. தேங்காய் உடைத்தல்... (அகங்காரத்தை அழிக்கின்ற அஞ்ஞானத்திலிருந்து ஞான நிலைக்கு செல்லுதல்..ஞான ஒழுக்கம்.
5. மூன்று இனிப்புகள்... எங்கும் இறைநிலை. நானும் இறைவனும் ஒன்று. நானே இறைநிலை ... இந்த உடலில் நான் விருந்தாளி ..எனது நிலையை உணர்ந்து, உடல் உற்று நோக்கல், உடல் பண்பில் விடுபட்டு தன்னிலையில் இணைதல்.
6. ஊதுவத்தி.... சுயநலம் என்கின்ற பக்தியை எரித்து பொதுநலம் என்கின்ற தெய்வீக மணத்தை பரவச்செய்தல்,
7. தட்க்ஷனை ...தன்னால் இயன்ற பொருள் உள்ளம் சார்ந்த பரிவு, பக்தி அறிவு சார்ந்த ஆலோகனை பக்க பலமாக இருத்தல், உழைப்பு வேறுபாடின்றி எல்லோரிடமும் உறவு கொள்ளல் என்கின்ற பண்பை பணிவு என்ற ஒரு காகித பையில் கொடுத்தல்.

இது நாம் மேற்கொள்கிற ஆன்மாவை நோக்கிய பயணம், ஆன்மீக பயணம். பெருமை கொள்ளவேண்டிய பயணம், பயணத்தில் அனுபவத்தில் புறத்தில் கிடைக்கின்ற விளக்கம். (எங்கும் இறைநிலை) மகரஜோதி புனிதமான (சுத்த) சமரச (புத்தி, மனம், உடல் ஒரே இலக்கில் நகர்த்துவது) சன்மார்க்கம். (ஆன்மாவை நோக்கிய பயணம்) நமக்கு உணர்த்துகின்ற அனுபவக்கின்ற நிலை.  அருட்பெருஞ்ஜோதி (நானும் இறைவனும் ஒன்று)

எனவே வாரா வாரம் அனைவரும் உடல் ஒழுக்கம் (உடற்பயிற்சி) இந்திரிய ஒழுக்கம். ஞான ஒழுக்கம். மண ஒழுக்கம். பயில தவறாமல் பங்குகொண்டு இந்த உடலில் தான் விடுதலை. இந்த மனதில்தான் பக்தி. இந்த அறிவில்தான் தெளிவான இறைவனைப்பற்றிய முடிவு அறியவிடாமல் தடுக்கின்ற இந்திரிய கட்டுப்பாடு பயிற்சி, என்பதை உணர்ந்து செயல்பட உதவும் குருபக்தி பயிலுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிகழ்ச்சி நிரல்
17.11.2013   கார்த்திகை 1ந்தேதி  மாலை அணிதல் காலை 7 மணி
                    (கொண்டுவரவேண்டிய பொருட்கள் ..துளசி மாலை, வெற்றிலை
                    பாக்கு, ஐந்துவகை பழங்கள், மூன்று வகை இனிப்புகள், தேங்காய்,
                    ஆறுவகை மலர்கள்,  கற்பூரம், ஊதுவத்தி)
28.12.2013   சுமங்கலி பூஜை
29.12.2013   திருவிளக்கு பூஜை
01.01.2014   இருமுடிகட்டு  ..காலை 6 மணிமுதல் 10 மணிவரை
                     இடம் . குசலாம்பாள் மண்டம்
                    (தயவு செய்து ஒழுக்கத்தை கடைபிடிக்கவும்)
                    மதியம் ஒரு மணிக்கு மலைக்கு புறப்படுதல் ..
                    இரவு திருச்சியில் உணவு
02.01.2014  முண்டகாயம் முருகன் கோயில் காலை 6 மணி குளியல் + உணவு
                    காலை 9 மணி பம்பை ..மதியம் 1 மணி சபரி மலை ..உணவு ..
                    இரவு தங்குதல் ..உணவு
03.01.2014  காலை நெய் அபிஷேகம் ..உணவு 
                    (பகல் 12 மணி நிலக்கல் உணவு)
                    மாலை 6 மணி குற்றாலம் நீராடல்+உணவு
                    இரவு 11 மணி பழனிமலை அடைதல் தங்குதல்
04.01.2014  காலை 6 மணி சாமி தரிசனம்..காலை உணவு+கோயில் தரிசனம்
                    மாலை 3 மணி பிரம்மா மற்றும் ஈசுவரன் கோயில் தரிசனம்
                    இரவு 11 மணி சென்னை அடைதல்


05.01.2014  மாலை கலைதல்..நெய்பிரசாத விநியோகம்

(பயண தொகை ரூ.5000 (பேரூந்து 4000+வாரபூஜை 500+இருமுடி 500)
முன்பணம் ரூ,2500 மாலை அணியும்போது கொண்டுவரவும்.

குருபக்தி, இறைவழிபாடு, பக்தி சேவை, இதுவே நாம் செய்யும் பூஜையின் பண்பு
குருசாமி


Malai Wearing ON 17-11-2013 (TAMIL Karthigai 1) sunday

AT 7 AM - Gugusamy Illam,Egmore

COME WITH
THULASI MALA, Pooja Materials, 5 type fruits, three type sweets, Coconut, 6 type flowers, Camphor, Pathies. etc.
Programme
28-12-2013 Sumangali Pooja
29-12-2013 Thiruvillaku Pooja
1-1-2014     Irumudi kattu morning 6 am to 10 a.m.
2-1-2014     Mundakayam Koil 6 am, bath and food, 9 am pamba, 1 pm sabari mala - food night stay
3-1-2014     Morning Nei Abhishegam- Food at Nilakkal 12 noon, Evening 6 pm Kutralam Falls bath +
                    Food   Night 11 pm palani Stay
4-1-2014     Morning 6 am Swami Dharisanam - Morning food + lunch, 1 pm samayapuram Dharsan
                    3.pm Bramma & Eswaran Koil Dharan, Night 11pm chennai
5-1-2014     Malai Kalaithan, Nei Prasadam by Gurusamy

Trip (Volvo Bus) Charge Rs.5000(4000 for travel+Weekly Pooja 500 and Irumudi 500)
Advance to be paid Rs.2500/- on 17-11-2013
by Gurusamy

CHAKRA



Sastha Illam - Ramanavami--by Varun Sampathkumar

Please book free dharsan sabarimala in the website : http://www.sabarimalaq.com/

108 சுவாமியே சரணம் ஐயப்பா!
ஓம் சுவாமியே  சரணம் ஐயப்பா
அரிஹரசுதனே  சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
அமுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
அமுதமலை இறக்கமே  சரணம் ஐயப்பா
அன்புள்ளம் கொண்டவனே சரணம் ஐயப்பா
அமுதா நதியே  சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
அனாத ரட்சகனே  சரணம் ஐயப்பா 10
ஆபத்தபாந்தவரே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா
ஆதிசக்தி மைந்தனே சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா
இணையில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
இன்சுவை பொருளே சரணம் ஐயப்பா 20
இடர்களை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
இருளகற்றிய ஜோதி சரணம் ஐயப்பா
இன்பம் தருபவனே சரணம் ஐயப்பா
இஷ்டம் வரம் தருபவரே சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
ஈசனின் மைந்தனே  சரணம் ஐயப்பா
ஈன்றெடுத்தே தாயே சரணம் ஐயப்பா
ஈகை நிறைந்தவனே சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா 30
உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
உடும்பறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
என் குருநாதரே சரணம் ஐயப்பா
எங்கள் குறை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
எருமேலி வாசனே சரணம் ஐயப்பா
எங்களை காத்தருள்வாய் சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளன் சரணம் ஐயப்பா 40
ஏற்றம் மிகுந்தவனே சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே  சரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓதும்மறை பொருளே  சரணம் ஐயப்பா
ஒளடதம் ஆனவனே சரணம் ஐயப்பா
கன்னி மூலகணபதி பகவானே சரணம் ஐயப்பா
கருத்த சுவாமியே சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா 50
கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
கலியுக வரதனே சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
கற்பூர ஜோதியே  சரணம் ஐயப்பா
கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
கருணையின் வடிவே சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
காருண்ய மூர்த்தியே சரணம் ஐயப்பா
காமாட்சியே தாயே  சரணம் ஐயப்பா 60
காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா
குறைகளை நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா
குற்றங்களை பொறுத்தருள்வாய் சரணம் ஐயப்பா
குழந்தை மனம் படைத்தவனே  சரணம் ஐயப்பா
குருவாயூர் அப்பனே  சரணம் ஐயப்பா
குன்றின் மீது அமர்ந்திருப்பவனே சரணம் ஐயப்பா
கொண்டு போய் கொண்டு
வரனும் பகவானே சரணம் ஐயப்பா
சபரி பீடமே சரணம் ஐயப்பா 70
சரங்குத்தி ஆலே  சரணம் ஐயப்பா
சபரி கிரீஸனே சரணம் ஐயப்பா
சங்கடங்களை தீர்த்துடுவாய் சரணம் ஐயப்பா
சத்ரு சம்ஹரனே சரணம் ஐயப்பா
சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
சாந்த சொரூபனே  சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா
சிறிய கடுத்தசாமியே சரணம் ஐயப்பா
சிதம்பரனார் பாலகனே  சரணம் ஐயப்பா 80
சுடரும் விளக்கே  சரணம் ஐயப்பா
தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
திருமால் மருகனே சரணம் ஐயப்பா
தித்திக்கும் தெள்ளமுதே சரணம் ஐயப்பா
தேனாபிஷோக பிரியரே சரணம் ஐயப்பா
நாகராஜக்களே சரணம் ஐயப்பா
நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
நீலமலை இறக்கமே சரணம் ஐயப்பா
நீல லஸ்தர தாரியே சரணம் ஐயப்பா 90
நெய் அபிஷேக பிரியரே சரணம் ஐயப்பா
பம்பா நதியே சரணம் ஐயப்பா
பம்பையின் சிசுவே சரணம் ஐயப்பா
பம்பை விளக்கே  சரணம் ஐயப்பா
பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
மமதையெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
மகர ஜோதியே சரணம் ஐயப்பா
வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே  சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
விபூதிப் பிரியனே சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே  சரணம் ஐயப்பா
பஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
மாளிகை புரத்தம்மனே சரணம் ஐயப்பா
தேவிலோக மஞ்சாதவே  சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஐஸ்வர்யம் தருபவனே  சரணம் ஐயப்பா 
108 சுவாமியே சரணம் ஐயப்பா!


அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்
ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்
யஹம் ஆர்த்தானா மார்த்தி பீதானாம்
பீதி நாசனம் த் விஷதாம் காலதண்டம் தம்
ராமசந்த்ரம் நமாம் யஹம் ஸன்னத்த:
கவசீ கட்கீசாப பாண தரோயுவா கச்சன்
மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?
மண நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத
ஸராயச கண்டிதாகில தைத்யாய ராமாயாபந்
நிவாரிணே ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய
வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே
நம அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச்
வதஸ்ந மஹாபலௌ ஆகர்ண
பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ

- இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.  


Sastha Illam - Poojas -- by Varun Sampathkumar












சபரிமலைக்குப் புறப்படுவோம்

மாலை அணியும்போது சொல்லும் மந்திரம் :

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்த முத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே-
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:அ
மாலை கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - தேஹமே விரத விமோசனம்

மூன்று பணிகள் : சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்தும் மகிஷி எனும் அரக்கியை அழிக்க, குழந்தை பாக்கியம் இல்லாத சிவபக்தரான ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பேறு கிடைக்கச் செய்ய. இப்பணிகளைக் குறுகிய காலத்தில் முடித்து விட்டார் ஐயப்பன்.




தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் அநாக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.
நெய்த்தேங்காய் ஏன்?: சபரிமலை ஐயப்பனுக்கு படைக்கப்படும் பொருட்களில் நெய் அடைக்கப்பட்ட தேங்காய் பிரதான இடம் பிடித்திருக்கிறது. ஐயப்பன், வளர்ப்புத் தந்தையான பந்தள மகாராஜாவை பிரிந்துசெல்லும் போது தன்னை வருடத்தில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்றார். 


அவர் வழி கேட்டபோது, வனத்தின் வழியே நீங்கள் வரும்போது கருடன் ஒன்று வழிகாட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி வருடத்திற்கு ஒருமுறை மன்னர் தன் மகனை காணச்சென்றார்.
தான் அதிக பாசம் வைத்திருக்கும் மகனை காணச்செல்லும் போது ஏதாவது கொண்டு செல்ல வேண்டும். அதேசமயம் அப்பொருள் கெடாமலும் இருக்க வேண்டும். எனவேதான், மன்னர் அவருக்கு நெய் மற்றும் அதில் செய்யப்பட்ட பண்டங்களை கொண்டு சென்றார். நெய் எளிதில் கெட்டுப்போகும் பொருள் அல்ல. அதைக் குறிக்கும் வகையிலேயே இப்போதும் நெய்த்தேங்காய் கொண்டு செல்கின்றனர்.


பெண்கள் காணும் ஐயப்பன்:காட்டில் இருந்த மகன் ஐயப்பனை காணச்சென்ற தந்தை ராஜசேகர மகாராஜா அவருக்கு சூட்டி அழகு பார்க்க ரத்தின மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலீயங்கள், பதக்கம் ஆகிய ஆபரணங்களைக் கொண்டு சென்றார். இதனடிப்படையில் தற்போதும் சபரிமலையில் மகரசங்கராந்தி தினத்தன்று சுவாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். பெண்கள் இக்காட்சியை தரிசிக்க முடியாது என்பதால், பந்தளம் அருகிலுள்ள பெருநாடு ஐயப்பனை இந்த நகைகளால் மகரசங்கராந்திக்கு நகைகள் எடுத்துச் செல்லப்படும் முன்பு அலங்கரிப்பர். இங்கே பெண்கள் ஐயப்பனை நகையுடன் தரிசிக்கலாம்.



சபரிமலை அருகிலுள்ள சிவத்தலங்கள்:சபரிமலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை தரிசிப்பதோடு நின்றுவிடாமல் அருகில் இருக்கும் சிவத்தலங்களுக்கும் சென்று வரலாம்.


ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.
இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே.
இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்.


 






எருமேலி:
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.

வாபர் கோயில்:

எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

பேட்டைதுள்ளல்:
ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், " எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

பேரூர்தோடு:
பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

காளையை கட்டிய மரம் :

காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது. காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.

அழுதாநதி:

மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம்.

அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம். பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.
மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.

காவலர் ஐயப்பன் :
அழுதாமலை உச்சியில், "இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும். 

No comments:

Post a Comment